இந்திய அணியின் தோல்வி அணிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை.. கவாஸ்கர் அதிரடி!

சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும்.

இந்திய அணியின் தோல்வி அணிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை.. கவாஸ்கர் அதிரடி!

அகமதாபாத் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.

இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பேசிய கவாஸ்கர், “எனக்கு இது வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்திய அணி 10 ஆட்டங்களில் பயங்கரமாக விளையாடியது. ஆனால் கோப்பையை பெறக் கூடிய ஒரு அடியை மட்டும் எடுத்து வைக்க முடியவில்லை. ஆனாலும் நாம் இந்திய அணி பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்.

இந்த இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறது. சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும். ஆனால் இந்த அணி 10 ஆட்டங்களிலும் பல அம்சங்களிலும் பரபரப்பாக விளையாடியது.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த மெகா தவறு.. தோல்விக்கு காரணம் அதுதான்? டிராவிட் செய்த சொதப்பல்.. 

இந்த முறை இந்திய அணியின் வழியில் செல்லக்கூடிய சில விஷயங்கள் நடக்கவில்லை. பரவாயில்லை சில நேரங்களில் அதிர்ஷ்டம் எதிராகத்தான் செல்லும். ஆனால் நான் சொன்னது போல ஐந்து முறை உலக கோப்பையை வென்றவர்களிடம் தோற்பதில் எந்த அவமானமும் கிடையாது. 

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி வெற்றி பெறுவது என்று தெரியும். இந்திய அணி அவர்களை தொடர்ந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதற்கு நான் பெருமை கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

ரோகித் பெரிய தப்பு பண்ணி விட்டார்... அதுதான் இந்தியாவுக்கு  பின்னடைவா போச்சு... சேவாக் குற்றச்சாட்டு!

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...