ரோகித் சர்மா ஓய்வு... இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் தெரியுமா?
38 வயதான ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

38 வயதான ரோகித் சர்மா, இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று சமூக வலைத்தளத்தில் அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் ஆக செயற்பட விருப்பம் தெரிவித்த போதும், இந்திய அணியில் தேர்வு குழு தலைவர் ஆன அஜித் அகார்கர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரம் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்திருந்தனர்.
மேலும் ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என்றால் அணியை விட்டு நீக்க முடிவெடுத்திருந்தார்கள். இது குறித்து ரோகித் சர்மாவிடம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதனையடுத்து, அடுத்த கேப்டன் பதவி பும்ராவுக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் பும்ராவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால், அவரை கேப்டன் பதவியில் நியமிப்பது சரியான முடிவு கிடையாது என்று தேர்வு குழு தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து இந்தியன் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை சுப்மன் கில் ஏற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கில் ஏற்கனவே ஒரு நாள் அணியில் துணை கேப்டனாக செயல்பட்டு வருகின்றார்.
எனவே, டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அவரே நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது வெளியாகலாம்.