இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

Dec 27, 2024 - 13:40
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.

"இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்' என்று இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!