கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... முதல் ட்விஸ்ட்.. என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிசிசிஐ சில முடிவுகளை எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிசிசிஐ சில முடிவுகளை எடுத்துள்ளது.
கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் உச்சபட்ச அதிகாரம் அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், பிசிசிஐ எடுத்துள்ள தீர்மானங்களால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது என்பது உறுதியாகி உள்ளது.
துணை பயிற்சியாளர்களை கவுதம் கம்பீரே தேர்வு செய்வார் என கூறப்பட்ட நிலையில், அவர் சொன்ன துணை பயிற்சியாளர்களில் ஒருவரை மட்டுமே பிசிசிஐ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதாவது, பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயர், பவுலிங் பயிற்சியாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் வினய் குமார் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் ஆகிய மூவரை பயிற்சியாளர் குழுவில் சேர்க்க வேண்டும் என கவுதம் கம்பீர் பிசிசிஐ-இடம் கேட்டு இருக்கிறார்.
அதில் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான அபிஷேக் நாயரை மட்டும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ ஒப்புக் கொண்டு உள்ளது.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் கேப்டன்சியில் விளையாடிய வினய் குமாரை பவுலிங் பயிற்சியாளராக ஏற்க முடியாது என பிசிசிஐ கை விரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், அவரால் பும்ரா, முகமது ஷமி போன்ற ஜாம்பவான் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை அளிக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிசிசிஐ அவரை ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜி ஆகிய இருவரில் ஒருவரை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் சரியான தேர்வாக இருப்பார் என பலரும் கருதினாலும், பிசிசிஐ வெளிநாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருப்பதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்பையே இந்திய அணியுடன் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு பயணிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ எடுத்து இருக்கும் இந்த முடிவுகளால் கவுதம் கம்பீருக்கு இந்திய அணியில் உச்சபட்ச அதிகாரம் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |