உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் வியப்பு

புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிடப்பட்டுள்ளன.

Sep 29, 2023 - 11:33
Oct 1, 2023 - 19:39
உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் வியப்பு

புவியியல் ஆய்வு விஞ்ஞானிகளால் உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய கண்டத்தை ஜீலந்தியா (Zealandia) என்று பெயரிட்டுள்ளதுடன் இது 375 ஆண்டுகள் நீருக்குள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகளால் தெரிவித்துள்ளனர்.

கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலின் தரவுகளை பயன்படுத்தியே ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நியூசிலாந்துக்கு அருகே உள்ள இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியிருப்பதுடன் ஒட்டுமொத்த பரப்பளவு 49 இலட்சம் சதுர கிலோ மீற்றர் என தெரிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் இந்த கண்டமானது மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியதானது எனவும் இக்கண்டத்தில் நியூசிலாந்தை போன்ற சில தீவுகள் உள்ளதாகவும் புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!