புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனி டெக்ஸி கிடையாது: பிரிட்டன் உள்துறையின் புதிய கடும் விதி
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவ அப்பாயிண்ட்மெண்டுக்கு செல்வதற்காக டெக்ஸி சேவையை பயன்படுத்த முடியாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலாக, அவர்கள் பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
ஆனால், சிறப்பு கவனம் தேவைப்படும் சில பிரிவுகள்—உடல் ஊனங்கள் கொண்டவர்கள், தீவிர நோயாளிகள், நீண்டகால சிகிச்சை பெறுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்கள்—இந்த புதிய விதிகளிலிருந்து விலக்கப்படுவர்.
உள்துறை அலுவலகம் வழங்கிய தகவலின்படி, புகலிடக்கோரிக்கையாளர்கள் மருத்துவர்களைச் சந்திக்க ஆண்டுதோறும் சுமார் £15.8 மில்லியன் செலவாகிறது. பலர் மிக நீண்ட தூரம் டெக்ஸியில் பயணிப்பதால் இந்தச் செலவு அதிகரித்து வருகிறது.
பிபிசி நடத்திய விசாரணையிலும், ஒருவர் ஒரு முறை மருத்துவரைக் காண 250 கிலோமீட்டர் டெக்ஸியில் பயணித்து, சுமார் £600 கட்டணமாக செலுத்தியிருப்பது வெளிச்சத்துக்குவந்தது. இதுபோன்ற சம்பவங்களே அரசை விதிகளை மாற்றத் தூண்டியதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, தேவையற்ற அரசுச் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மருத்துவ சேவைகளுக்காக செல்லும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு டெக்ஸி அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
