சர்வதேச டி20 போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக் சர்மா – இன்று நடக்குமா மாபெரும் சாதனை?

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனையை முறியடிப்பாரா அபிஷேக் சர்மா – இன்று நடக்குமா மாபெரும் சாதனை?

இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, கடந்த ஆண்டு ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார். தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை அவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டார் என்று கூறலாம்.

இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் அபிஷேக் ஷர்மா, 25 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 6 அரைசதம் உட்பட 936 ரன்களைக் குவித்துள்ளார்.

இந்த 2025-ஆம் ஆண்டில் அபிஷேக் சர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தற்போது டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்வதோடு மட்டுமின்றி, 200 ஸ்டிரைக் ரேட்டுடன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டில் மட்டும், அபிஷேக் ஷர்மா இதுவரை 14 டி20 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் கூட, இந்திய அணி சரிவை சந்தித்தபோது, அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தப் போட்டியில் அவர் 37 பந்துகளை சந்தித்து, 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் அபிஷேக் ஷர்மா, மேலும் 10 ரன்களை அடிக்கும் பட்சத்தில், முன்னாள் இந்திய வீரரான ஷிகர் தவானின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கக் காத்திருக்கிறார்.

அந்த சாதனையின் விவரம்: இந்திய டி20 அணியின் இடது கை துவக்க வீரராக, ஷிகர் தவான் கடந்த 2018-ஆம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடி 689 ரன்களைக் குவித்திருந்தார். ஒரு ஆண்டில் இந்திய அணியின் இடது கை துவக்க வீரராக அடிக்கப்பட்ட அதிக ரன்களாக இது இருந்து வருகிறது. 

இந்நிலையில், அவரது இந்த சாதனையை அபிஷேக் சர்மா இன்று முறியடிக்க 10 ரன்கள் மட்டுமே தேவை.

இதனால், நிச்சயம் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா அந்த சாதனையை முறியடிப்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

அத்தோடு மட்டுமல்லாமல், அபிஷேக் சர்மா இந்த போட்டியில் 64 ரன்களை அடிக்கும் பட்சத்தில், விரைவாக டி20 போட்டிகளில் 1000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது