எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்த 13 வயது வீரர்!

இதன் மூலம் “லிஸ்ட் ஏ” எனப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைந்த வயது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.

Dec 22, 2024 - 14:29
எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை செய்த 13 வயது வீரர்!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகக் குறைந்த வயதில் அதாவது 13 வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை செய்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தற்போது  2024 - 25 விஜய் ஹசாரே டிராபி தொடரில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பீகார் அணியில் உள்ள வைபவ் சூர்யவன்ஷி மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று தனது அறிமுகத்தை பெற்றதன் மூலம், தனது முதலாவது “லிஸ்ட் ஏ” போட்டியில் ஆடினார் வைபவ் சூர்யவன்ஷி. 

இதன் மூலம் “லிஸ்ட் ஏ” எனப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைந்த வயது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.

13 வயது 269 நாட்கள் ஆகிற நிலையில், வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனையை செய்து உள்ள நிலையில், முன்தாக அலி அக்பர் என்ற வீரர் 14 வயது 51 நாட்களில் மிகக் குறைந்த வயதில் “லிஸ்ட் ஏ” போட்டிகளில் ஆடிய இந்திய வீரர் என்ற சாதனையை செய்து இருந்தார். 

1999 - 2000வது சீசனில் “லிஸ்ட் ஏ“ போட்டியில் அவர் விளையாடிய நிலையில், 24 ஆண்டுகளுக்கு பின்னர் வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். 

அத்துடன், மிகக் குறைந்த வயதில் ரஞ்சி டிராபி, லிஸ்ட் ஏ அணி மற்றும் இந்திய அண்டர் 19 அணிகளில் ஆடிய இந்திய வீரர் ஆகிய சாதனைகளை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. இடது கை பேட்ஸ்மேன் ஆன வைபவ் சூர்யவன்ஷி “லிஸ்ட் ஏ” போட்டியில் அறிமுகமான நிலையில், தனது முதல் போட்டியில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!