அந்த வீரரின் ஆட்டமும் முக்கிய காரணம்.. தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!

ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. 

Apr 1, 2024 - 11:15
அந்த வீரரின் ஆட்டமும் முக்கிய காரணம்.. தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறித்து  சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து வெளியிட்டார்.

சிஎஸ்கே அணியின் பவுலர்கள் முதல் 6 ஓவர்களுக்கு பின் சிறப்பாக விளையாடினார்கள். 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

பந்து வீசியதுக்கு கிடைத்த வெற்றி... லக்னோ வீரர் மயங்க் யாதவ் என்ன சொன்னார் தெரியுமா?

இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸின் போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது.

ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதுதான் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. 

அத்துடன், பவர் பிளே ஓவர்களில் சொதப்பியது எமக்கு பின்னடைவாக இருந்தது.  டெல்லி பேட்டிங்கின் போது முதல் 4 ஓவர்களை நன்றாக வீசினோம். 

பவர் பிளேவின் கடைசி 2 ஓவர்கள் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றது. வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம் தான். அதனால் கவலைப்பட தேவையில்லை” என்றார்.

 கேப்டனான பின் ருதுராஜ் கெய்க்வாட்-ன் பேட்டிங் ஃபார்ம் மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!