வாஸ்து படி எந்த வகை கடிகாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இப்படி கட்ட மறந்துறாதீங்க...!

வாஸ்து சாஸ்திரத்தில் கடிகாரம்: சுவர் கடிகாரம், கைக்கடிகாரம் என தொடங்கி தற்போது ஸ்மார்ட் வாட்ச் வரை நேரத்தை பார்க்க வந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தில், கடிகாரம் நம் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. 

வாஸ்து படி எந்த வகை கடிகாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இப்படி கட்ட மறந்துறாதீங்க...!

வாழ்க்கையில் நேரத்தைப் பின்பற்றுவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. நேரத்தை அறிய நம் முன்னோர்கள் வானத்தில் சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். 

சுவர் கடிகாரம், கைக்கடிகாரம் என தொடங்கி தற்போது ஸ்மார்ட் வாட்ச் வரை நேரத்தை பார்க்க வந்துவிட்டது. இன்றைய காலகட்டத்தில், கடிகாரம் நம் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. 

உங்களின் கைக்கடிகாரம் உங்கள் நேரத்தை பாதுகாப்பது மட்டுமின்றி உங்கள் வாழ்க்கையின் ஆற்றல் சமநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

வாஸ்து சாஸ்திரத்தில் கடிகாரம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அமைக்கும் போது அது உங்கள் வாழ்க்கையில் சமநிலையையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரம் என்பது உங்கள் வீட்டின் திசை, மூலைகள் மற்றும் பொருட்களுக்கு மட்டுமல்ல, அது உங்களின் தனிப்பட்ட பொருட்களுக்கும் பொருந்தும்.

தனிப்பட்ட பொருட்கள் என்று வரும்போது அது உங்களின் கைக்கடிகாரத்திற்கும் பொருந்தும். இந்த விதிகளைப் பின்பற்றி உங்கள் கைக்கடிகாரத்தை அணிந்தால், அது உங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்து உங்கள் அதிர்ஷ்டத்தையும் மாற்றும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், அதன் சில விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையில் தோல்விகளையும், துரதிர்ஷ்டத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

கடிகாரத்தின் டயல்

வாஸ்து படி, நீங்கள் கைக்கடிகாரத்தை அணியும்போதெல்லாம், அதன் டயல் பெரிதாக இருக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். பெரிய டயல் கொண்ட கடிகாரத்தை அணிவது உங்களுக்கு வாழ்க்கையிலும் உங்கள் தொழிலிலும் சில பிரச்சனைகளைத் தரும்.

நேரம் சரியாகக் காட்டப்படாத மிகச் சிறிய டயல் கொண்ட கைக்கடிகாரத்தையும் அணியக்கூடாது. எப்போதும் கைக்கடிகாரத்தின் டயல் சாதாரண அளவில் இருக்க வேண்டும். கடிகாரத்தின் டயல் வட்டமாகவோ அல்லது சதுரமாக இருப்பது நல்லது.

கடிகாரத்தை எந்த கையில் அணிய வேண்டும்?

கையில் கடிகாரத்தை அணியும் போது, எந்தக் கையில் கடிகாரம் அணிவது நல்லது என்று கட்டாயப்படுத்தும் விதி எதுவும் இல்லை. உங்கள் வசதிக்கேற்ப எந்தக் கையிலும் கடிகாரத்தை அணியலாம் என்பதே உண்மை. வலது கையில் கடிகாரத்தை அணிவது உங்களுக்கு வசதியாக இருந்தால், நீங்கள் தாராளமாக அணியலாம்.

ஸ்ட்ராப் எப்படி இருக்க வேண்டும்?

கைக்கடிகாரம் அணியும் போது, அதன் ஸ்ட்ராப்பையும் கவனிக்க வேண்டும். உங்கள் கையில் பொருத்தப்பட்ட கடிகாரத்தை எப்போதும் அணிய முயற்சிக்கவும். ஒரு தளர்வான ஸ்ட்ராப் கைக்கடிகாரத்தை அணிய வேண்டாம், ஏனெனில் அது அணிய சங்கடமாக இருக்கும், இந்த வகை கடிகாரம் உங்கள் கவனத்தை ஒரே இடத்தில் குவிக்க அனுமதிக்காது.

வாஸ்து படி, அத்தகைய கடிகாரம் உங்கள் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். கைக்கடிகாரத்தை அணியும் போது, அதன் பட்டை மணிக்கட்டு எலும்புக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கைக்கடிகாரத்தின் நிறம்

வாஸ்து படி மற்ற நிறங்களை விட கோல்டு மற்றும் சில்வர் நிற கடிகாரங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஏதேனும் ஒரு வேலை நேர்காணல் அல்லது தேர்வுக்கு செல்லும் போதெல்லாம், இந்த வகையான தங்க அல்லது வெள்ளி கடிகாரத்தை அணியுங்கள், இது வெற்றியைத் தரும். கடிகாரத்தின் டயல் முக்கோணமாக இருக்கக்கூடாது.

தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது

வாஸ்து படி தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலோ வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு கவனச்சிதறலையும், எதிர்மறை ஆற்றலையும் ஏற்படுத்தும், மேலும் இது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...