ஒரே நேரத்தில் 2 ஆப்கானிஸ்தான் அணிகள் பேட்டிங்.. கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாட்டின் இரண்டு ஆண்களுக்கான தேசிய அணிகள் இரண்டு தொடர்களில், இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த அரிய சம்பவம் நடந்துள்ளது.

ஒரே நேரத்தில் 2 ஆப்கானிஸ்தான் அணிகள் பேட்டிங்.. கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாட்டின் இரண்டு ஆண்களுக்கான தேசிய அணிகள் இரண்டு தொடர்களில், இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த அரிய சம்பவம் நடந்துள்ளது.

இந்த சிக்கலான விஷயத்தை எளிதாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.

2023 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில், அதே தேதிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியானது.

அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி அக்டோபர் 7 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில் ஆசிய கிரிக்கெட் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் கலந்து கொண்டன. இந்த ஐந்து அணிகளும் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கின்றன.

அதனால், ஒவ்வொரு அணியும் இரண்டாம் கட்ட வீரர்களை கொண்ட தேசிய அணிகளை ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடருக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்தன. 

இந்தியா சார்பில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையில் ஆன அணி தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டது. விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிகமாக இந்த அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடியது. அதே நாளில் மற்றொரு பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது.

இங்கே ஆசிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்து வீசிக் கொண்டிருந்த போது, உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணிக்கு எதிராக பேட்டிங் ஆடத் தொடங்கியது.

கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாட்டின் இரண்டு தேசிய ஆண்கள் அணிகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடியது புதிய சாதனை ஆனது. அதை செய்த முதல் அணியாக மாறியது பாகிஸ்தான்.

அதற்கு அடுத்த நாளே ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக, ஆசிய விளையாட்டில் இறுதிப் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டி துவங்கிய சில நிமிடங்களுக்கு முன்பு தான் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையே ஆன போட்டி துவங்கியது,

இரண்டு போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஒரே நாட்டின் இரண்டு தேசிய அணிகள் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த சாதனையை ஆப்கானிஸ்தான் அணி செய்துள்ளது. இந்த விசித்திர சம்பவம் இனி நடைபெறுவது சந்தேகம் தான்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...