இறுதிப்போட்டிக்க 8ஆவது முறையாக ஆஸி தகுதி.. அரையிறுதியில் ஏற்பட்ட டுவிஸ்ட்!
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கொல்கத்தா ஈடன் கார்டன் பலப்பரிட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கொல்கத்தா ஈடன் கார்டன் பலப்பரிட்சை நடத்துகின்றன.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து திணறினர்.
கேப்டன் பெவுமா டக் அவுட் ஆகியும் குயின்டன் டி காக் 3 ரன்களும், எய்டன் மார்க்கரம் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 24 ரங்களை சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி 95 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிந்து மீட்டனர். ஹென்ரிச் கிளாசன் 47 ரன்களில் வெளியேற டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 49.4 ஓவரில் தென்னாபிரிக்க அணி 212 ரன்கள் எடுத்தது.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆறு ஓவர்களில் எல்லாம் ஆஸ்திரேலிய அணி 60 ரன்கள் கடந்தது. டேவிட் வார்னர் 29 ரன்களில் வெளியேற மிச்சல் மார்ஸ் டக் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.
இதில் ஒன்பது பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். ஒரு கட்டத்தில் மார்னஸ் லாபஸ்சென் 18 ரண்களும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பினர். எனினும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 ரன்களில் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா 174 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட கைவசம் நான்கு விக்கெட்டுகளை இருந்தது. இதனால் தென்னாபிரிக்காவுக்கும் வெற்றியின் கதவு திறந்தது.
எனினும் பந்துகள் நிறைய இருந்ததால் ஆஸ்திரேலிய வீரர் ஜாஸ் இங்கிலிஷ் டெஸ்ட் மேட்ச் போல் விளையாடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் போல்ட் ஆனார். 19 ரன்களுக்கு கைவசம் 3 விக்கெட் இருந்ததால், ரசிகர்கள் இருக்கையின் நுணிக்கு சென்றனர்.
வழக்கம் போல் நெருக்கடி காரணமாக குயின்டன் டி காக் ஒரு கடின கேட்ச்சை விட்டார். இது போன்ற சின்ன சின்ன வாய்ப்பு வீணானது. எனினும் பாட் கம்மின்ஸ் கடைசி வரை நின்று ஆஸ்திரேலியாவின் வெற்றியை 16 பந்துகள் எஞ்சிய நிலையில் உறுதி செய்தார்.இதன் மூலம் 8வது முறையாக இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |