தோனி பாணியில் ரோகித் போட்ட பிளான்.. ஜடேஜாவை வைத்து கொடுத்த ட்விஸ்ட்!
ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சதம், குல்தீப் யாதவ் பவுலிங், முகமது ஷமியின் சாதனை விக்கெட் என்று இந்திய அணியின் வெற்றிக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.
ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது. உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இந்திய அணியின் பந்துவீச்சு கொஞ்சம் திணறிய போது, ரோகித் சர்மா அவர்களை கையாண்ட விதமும், அவசரம் இல்லாமல் ஆலோசித்து முடிவுகளை எடுத்ததும் பாராட்டுக்குறியது.
மிட்செல் - வில்லியம்சன் கூட்டணி ரன்களை குவித்து கொண்டிருந்த போது ரோகித் சர்மாவுக்கு ஓய்வறையில் இருந்தும், சக வீரர்களிடம் இருந்தும் அறிவுரைகள் கொடுக்கப்பட்டு கொண்டே இருந்தன.
ஆனால் எது தேவையோ அதனை மட்டும் ரோகித் சர்மா சரியாக செய்து கொண்டே இருந்தார். குறிப்பாக பதற்றமடைந்த இந்திய அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் கோட்டைவிட தொடங்கினார்கள். இதனை புரிந்து கொண்ட ரோகித் சர்மா, நியூசிலாந்து அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கான திட்டத்திற்கேற்ப ஜடேஜாவின் ஃபீல்டிங் பொசிஷனை மாற்றிக் கொண்டே இருந்தார்.
ஜடேஜா கிளென் பிலிப்ஸ்-க்கு கேட்ச் பிடித்த இடம் லாங் ஆஃப். அதேபோல் மிட்செல் கொடுத்த கேட்சை ஜடேஜா பிடித்த இடம் டீப் மிட் விக்கெட். அதேபோல் சாப்மேனுக்கு ஸ்கொயர் லெக் திசையில் கேட்சை பிடித்து அசத்தினார் ஜடேஜா.
இதன் மூலமாக ரோகித் சர்மா எப்படி கேப்டன்சியை செய்துள்ளார் என்று தெரிந்து கொள்ள முடியும். சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, ரெய்னா மற்றும் மெக்கல்லம் இருவரையும் இப்படிதான் பயன்படுத்தி இருப்பார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |