பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் என சொல்லப்பட்ட வீரர் ஓய்வு அறிவிப்பு.. என்ன நடந்தது?
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில, நல்ல டி20 வீரராக அறியப்பட்ட 34 வயதுடைய இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.
பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறிய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில, நல்ல டி20 வீரராக அறியப்பட்ட 34 வயதுடைய இமாத் வாசிம், அந்த அரசியலில் சிக்கி கடந்த சில மாதங்களாக அணியில் இடமின்றி தவித்து வந்தார்.
அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில் 34 வயதில் ஓய்வை அறிவித்து இருக்கிறார் இமாத் வாசிம். இனி சர்வதேச போட்டிகள் அல்லாத பல நாடுகளில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் டி20 அணியின் சிறந்த சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக அறியப்பட்ட இமாத் வாசிம் 2015 ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில்அறிமுகம் ஆனார்.
கடைசியாக 2020இல் ஒருநாள் போட்டியில் ஆடி இருந்த அவருக்கு ஒருநாள் அணியில் காரணமே இல்லாமல் இடம் மறுக்கப்பட்டது. ஆனாலும், டி20 அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார் இமாத் வாசிம்.
தோனி கொடுத்த ஒரே ஒரு அறிவுரை.. ரிங்கு சிங் வாழ்க்கையே மாறியது... அந்த ட்ரிக் இதுதான்!
கடைசியாக 2023 ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியில் விளையாடி பேட்டிங்கில் 31 ரன்கள் குவித்த இமாத் வாசிம், 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார். ஆனால், அதன் பின் அவருக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. அதை அடுத்து அவர் உலகக்கோப்பை தொடரின் போது வர்ணனையாளர் பணியை செய்தார்.
உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாறி விட்டது. தேர்வுக் குழு தலைவர் மாறி விட்டார். ஆனாலும், இமாத் வாசிம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணிய நிலையில் தற்போது இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |