ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாயினால் உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதன்படி, நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

