பிரித்தானியாவில் பொதுப் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்பும் பயணிகளுக்கு நூறு பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் இடம்பெறும் சமூக விரோத நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு அரசாங்கமும் உள்ளூராட்சி அமைப்புகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய நடவடிக்கையின் கீழ், பேருந்தில் உள்ள பிற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் இசை ஒலிபரப்புவது, தொடர்ந்து சத்தமிடுவது மற்றும் பிற பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பேருந்து ஊழியர்கள் அல்லது பயணிகள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் எனவும், இதன் மூலம் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அமைதியான பயண அனுபவத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

