சூர்யகுமாருக்கு செக் வைத்த சுப்மன் கில்... டி20 கேப்டன் பதவி காலி... ரசிர்கள் அதிர்ச்சி!

டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

சூர்யகுமாருக்கு செக் வைத்த சுப்மன் கில்... டி20 கேப்டன் பதவி காலி... ரசிர்கள் அதிர்ச்சி!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் திடீரென நியமிக்கப்பட்டுள்ளமை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்தாலும், சுப்மன் கில்லின் இந்த எதிர்பாராத வளர்ச்சி, சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு ஆபத்தாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை வரை சூர்யகுமார் யாதவ் தான் இந்திய டி20 அணியின் கேப்டன் என முன்பு கூறப்பட்டு இருந்தாலும் அந்த நிலை மாறி சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. 

அண்மையில் அறிவிக்கப்பட்ட 2025 ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில், டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக டி20 அணியில் இடம்பெறாமல் இருந்த கில், நேரடியாக துணை கேப்டனாக உயர்ந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்குப் பின்னால் ஒரு நீண்டகாலத் திட்டம் இருப்பது தெளிவாகிறது. சூர்யகுமார் யாதவிற்கு தற்போது 35 வயதை நெருங்குகிறது. 

எனவே, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, ஒரு இளம் தலைவரை உருவாக்கும் முயற்சியில் தேர்வுக்குழுவும், பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் சுப்மன் கில், பேட்டிங்கிலும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

அவரது தலைமைப் பண்புகள் தேர்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதன் காரணமாகவே, அவரை டி20 அணியின் எதிர்கால கேப்டனாக உருவாக்கும் முதல் படியாக இந்த துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன் சூர்யகுமார் யாதவும் கில் நியமனத்தை வரவேற்றுள்ளார். "கில் மீண்டும் அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. கடந்த முறை அவர் டி20 ஆடியபோதும் துணை கேப்டனாக இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

கேப்டனாக இந்திய அணிக்கு வெற்றிகளை தேடித் தந்திருந்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவின் சர்வதேச டி20 ஃபார்ம் 2024-ல் சற்று சரிவை சந்தித்தது. இப்போது சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால், சூர்யகுமார் யாதவ் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

2025 ஆசிய கோப்பை தொடர், சூர்யகுமார் யாதவின் கேப்டன்சிக்கும், அவரது பேட்டிங் திறமைக்கும் ஒரு அக்னி பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் அவர் கேப்டனாகவோ அல்லது பேட்ஸ்மேனாகவோ சோபிக்கத் தவறினால், அவரது கேப்டன் பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

சிஎஸ்கே- க்கு மேலும் ஒரு ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சி.. ருதுராஜ் இனி வெறும் பேட்ஸ்மேன் மட்டுமல்லசிஎஸ்கே- க்கு மேலும் ஒரு ஆல்ரவுண்டர் கிடைச்சாச்சி.. ருதுராஜ் இனி வெறும் பேட்ஸ்மேன் மட்டுமல்ல

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். எனவே, ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். 

இப்போதைக்கு சூர்யகுமார் யாதவ் தான் கேப்டன் என்றாலும், அடுத்த சில மாதங்களில் அது மாறினாலும் மாறலாம்.