தை திருநாளில் மகர ராசிக்குள் நுழையும் சூரியன் – 5 ராசிகளின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம்!
ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளன்று சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் காலமாக அமையப்போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களுக்கும் தலைவனாகக் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்வதன் மூலம் ராசி பெயர்ச்சியை ஏற்படுத்துகிறார். இந்த பெயர்ச்சியோடு தான் தமிழ் மாதங்களும் தொடங்குகின்றன. அந்த வகையில், ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளன்று சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும், ஐந்து ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் காலமாக அமையப்போகிறது.
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய பெயர்ச்சி தொழில் ஸ்தானத்தில் நிகழ்வதால் வேலை மற்றும் தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரித்து, மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வுக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு இது உகந்த காலமாக இருக்கும். தந்தை அல்லது பூர்வீக சொத்துகள் தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு, சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அதிர்ஷ்டம் இப்போது கை கூடும். தொலைதூர பயணங்கள் வெற்றிகரமாக அமையும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்கல்வி அல்லது வெளிநாடு செல்லும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு, சூரியன் எதிரி மற்றும் நோய் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் போட்டிகள் மற்றும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். மறைமுக எதிரிகள் பலவீனமடைவார்கள். பழைய கடன்கள் குறையும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், சாதகமான தீர்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உடல்நலமும் படிப்படியாக மேம்படும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இந்த சூரிய பெயர்ச்சி தைரிய ஸ்தானத்தில் நிகழ்வதால் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மார்க்கெட்டிங், மீடியா, எழுத்து மற்றும் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இது முன்னேற்றம் தரும் காலமாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.
மீன ராசிக்காரர்களுக்கு, சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிதி நிலைமை கணிசமாக வலுப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். பழைய முதலீடுகள் திடீரென பெரிய லாபத்தை அளிக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிடக் கருத்துக்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இதன் துல்லியம் அல்லது விளைவுகளுக்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
