மோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான்.. 56 ரன்னுக்குள் சுருட்டியது தென்னாப்பிரிக்கா!

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.

மோசமாக விளையாடிய ஆப்கானிஸ்தான்.. 56 ரன்னுக்குள் சுருட்டியது தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய நடப்பு டி20 உலகக் கோப்பையின் முதல் அரை இறுதி போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.

 28 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான்  அணி வீரர்கள், தென்னாப்பிரிக்கா வீரர்களின் வேகமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். 

10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 50 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில், 12வது ஓவருக்குள் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான்.

நான்கு வீரர்கள் வேகப் பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆகியதுடன், மூன்று வீரர்கள் சுழற் பந்துவீச்சாளர் ஷம்சி பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி இருந்தார்கள்.

ஆப்கானிஸ்தான் வீரர்களால் பந்தின் வேகம் மற்றும் பவுன்சை கணிக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 10 ரன்கள் எடுத்திருந்தார். 

முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் படுமோசமாக பேட்டிங் செய்து 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ ஜான்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் ஷாம்சி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். காகிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...