சிஎஸ்கேவுக்காக அதிரடியா நான் விளையாட இதுதான் காரணம்... ஷிவம் துபே சொன்ன காரணம்!

சிஎஸ்கே அணிக்காக மூன்று சீசன்களாக ஆடி வரும் துபே, பல விமர்சனத்தை சந்தித்த பின்பு நெருப்பு போன்ற ஆட்டத்தை சிஎஸ்கே ஸ்பெஷலாக ஆடி வருகிறார். 

சிஎஸ்கேவுக்காக அதிரடியா நான் விளையாட இதுதான் காரணம்... ஷிவம் துபே சொன்ன காரணம்!

கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக எதிர்பாராத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் தான் ஷிவம் துபே. அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் சரியாக கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளில் ஆடியும் ஷிவம் துபேவின் கிரிக்கெட் ஆட்டம் விமர்சனத்தை தான் சந்தித்து வந்தது.

அப்படி இருக்கையில் சிஎஸ்கே அணிக்காக மூன்று சீசன்களாக ஆடி வரும் துபே, பல விமர்சனத்தை சந்தித்த பின்பு நெருப்பு போன்ற ஆட்டத்தை சிஎஸ்கே ஸ்பெஷலாக ஆடி வருகிறார். 

ஸ்பின்னர் பந்து வீசினாலே சிக்ஸர் அடிப்பதை தான் வழக்கமாக வைத்துள்ள ஷிவம் துபே, குஜராத் அணிக்கு எதிரான சமீபத்தில் நடந்த போட்டியில் முதல் பந்திலயே சிக்சர் அடித்து மிரட்டி இருந்தார்.

21 பந்துகளில் 51 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கும் முக்கிய பங்கு வகித்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதும் வென்றிருந்தார். கடந்த போட்டியிலும் இவர் கடைசி கட்டத்தில் ரன் சேர்த்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 

ஆட்ட நாயகன் விருது வென்ற பின் பேசுகையில், “சிஎஸ்கே அணி மற்ற அனைத்து அணிகளையும் விட மிக வித்தியாசமான ஒன்றாகும். இவர்கள் எனக்கு சுதந்திரம் அதிகமாக கொடுப்பதால் நான் அவர்களுக்காக போட்டியை ஆடி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

நானும் அப்படியே என்னை செயல்படுத்த நினைப்பதால் அது எனக்கு உதவியும் செய்கிறது. அதற்காக நான் தயாராக உள்ளேன். சிஎஸ்கேவை பொருத்தவரையில் நான் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடடன் ஆட வேண்டும் என விரும்புகிறார்கள். நானும் அதையே தான் செய்ய விரும்புகிறேன்” என கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...