பொறுமையை இழந்து டிரஸிங் ரூம்மிலிருந்து ஜடேஜாவை திட்டிய ரோதித் சர்மா.. நடந்தது என்ன?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. 

பொறுமையை இழந்து டிரஸிங் ரூம்மிலிருந்து ஜடேஜாவை திட்டிய ரோதித் சர்மா.. நடந்தது என்ன?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவித்தது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வரும் நிலையில் கேப்டன் ரோகித் சர்மா ஜடேஜாவிடம் கோபப்பட்டு திட்டிய சம்பவம் அரங்கேறியது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நான்கு ரன்களின் ஆட்டம் இழந்தார். 

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு சுப்மன் கில், விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

சதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கில் 92 ரன்களிலும், விராட் கோலி 88 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கடும் நெருக்கடியில் விளையாடிய ஸ்ரேயாஸ் 56 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். 

இதில் ஆறு சிக்ஸர்களும் மூன்று பவுண்டர்களும் அடங்கும். இறுதியில் கே எல் ராகுல் 21 ரன்கள் எடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ஆட்டத்தில் இன்னும் மூன்று ஓவர்கள் எஞ்சி இருந்தது.

அப்போது முகமது ஷமியும் ஜடேஜாவும் களத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் ஜடேஜாவின் ஆட்டம் முடியும் வரை ஷமிக்கு வாய்ப்பு கொடுக்காமல் விளையாடி ரன்கள் சேர்க்கும்படி ரோகித் சர்மா ட்ரெஸ்ஸிங் ரூம்மில் இருந்து மெசேஜ் அனுப்பினார். 

ஆனால் இதனை கண்டுகொள்ளாத ஜடேஜா ஷமிக்கு சிங்கிள் வழங்கி எதிர்முனையில் நின்று கொண்டார். இதைப் பார்த்த ரோகித் சர்மா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஜடேஜாவை சொல்வதை கேட்க மாட்டாயா என்பது போல் சைகையால் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

ரோகித் சர்மாவின் கோபத்திற்கு ஏற்ப முகமது சமியும் சிங்கிள் ஓடுகிறேன் என்ற பெயரில் ரன் அவுட் ஆனார். இந்த நிலை வரும் போதெல்லாம் இந்திய அணி 350 ரன்களை கடந்து இருந்தது. 

இது மிகப்பெரிய இலக்காக கருதப்பட்டாலும், ரோகித் சர்மா ஏன் சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்பட்டார் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

சில சமயம் ரோகித் சர்மா தன்னுடைய பொறுமையை இழந்து வருவதாகவும் ஆட்டத்தை கூலாக அணுக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...