அமெரிக்காவில் கோலி.... டி20 உலகக்கோப்பையில் மாஸ்டர் பிளான்... பின்னணியில் ஐசிசி? 

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலமாக்கும் நோக்கத்தில்தான் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற உள்ளது. 

Jan 6, 2024 - 19:14
அமெரிக்காவில் கோலி.... டி20 உலகக்கோப்பையில் மாஸ்டர் பிளான்... பின்னணியில் ஐசிசி? 

இந்த வருடத்தில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நேரடியாக இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பின் பிசிசிஐயிடம் தான் டி20 உலகக்கோப்பையில் ஆட விரும்புவதாக ரோஹித் சர்மா கூட கூறி விட்டார். ஆனால், திடீரென  விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடும் முடிவை இப்போது எடுத்துள்ளார்.

இதற்கு காரணம், விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் ஆடினால் அது சில பலன்களை பெற்றுத் தரும் என முக்கிய பிசிசிஐ அதிகாரிகளிடம்  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கோரிக்கை வைத்து இருக்கலாம் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலமாக்கும் நோக்கத்தில்தான் டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற உள்ளது. 

அதன் பணக்கார நாடான அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் வருவாய் ஈட்ட முடியும் என்பதுடன், அதை செய்ய கிரிக்கெட்டின் பிரபலமான ஒருவர் தேவை என்பதால் விராட் கோலி அதற்கு பொருத்தமான நபர் என ஐசிசி நினைத்துள்ளது.

சமூக ஊடகங்களில் விராட் கோலிக்கு ரொனால்டோ, மெஸ்ஸி போன்ற கால்பந்து பிரபலங்களுக்கு இணையாக  ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவரை அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வைத்தால் அதிக ரசிகர்களை மைதானத்துக்கு அழைத்து வரலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

இதனாலேயே, ஐசிசி விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் ஆடுவதை விரும்புவதாக கூறப்படுகிறது. எனினும், விராட் கோலி மீண்டும் டி20 அணியில் இடம் பெற இது மட்டுமே காரணமாக இருக்காது என்றும் கூறப்படுகின்றது.

இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆசையும் கோலிக்கு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!