59 பந்தில் 90 ரன் குவித்த பாபர் அசாம்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 59 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

Oct 4, 2023 - 10:59
59 பந்தில் 90 ரன் குவித்த பாபர் அசாம்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 59 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதில் டேவிட் வார்னர் 48 ரன்களும், மார்ஸ் 31 ரன்களும், ஸ்மித் 27 ரன்களும் மார்னஸ் லாபஸ்சன் 40 ரன்களும் எடுக்க நடு வரிசையில் மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் அரை சதம் கடந்தனர்.

இறுதியில் ஜாஸ் இங்கிலீஷ் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கினார்கள். 

வழக்கம் போல் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பக்கர் ஷமான் 22 ரன்களும், இமாமுஹாக் 16 ரன்களும், அப்துல்லா ஷபிக் 12 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டனாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய சதாப்கான் ஒன்பது ரன்கள் தான் சேர்த்தார். 

இதனை அடுத்து ஐந்தாவது விக்கெட்டுக்கு இப்திகார் அகமது, பாபர அசாமும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இப்திகார் அகமது 83 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். அதிரடியாக விளையாடிய பாபர் அசாம், தன்னுடைய இன்னொரு முகத்தை காட்டினார். 

எப்போதுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பாபர் அசாம் இன்றைய பேட்டிங்கில் கொளுத்தினார். 59 பந்துகளை எதிர்கொண்ட அவர் 90 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 152 என்று அளவு இருந்தது. 

எனினும் பாபர் அசாம் 90 ரன்களில் ரிட்டயர்டு அவுட் ஆனார். இதே போன்ற முகமது நவாஸ் அரை சதம் கடக்க ஆகார் சல்மான் 10 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி வெற்றி அருகே வந்து 47.4 ஓவரில் 337 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!