அவமானத்தை மறக்காத ஷமி... அணிக்குள் புகைச்சல்... ஹர்த்திக்குக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி... 

2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது,  மூத்த வீரரான முகமது ஷமியை களத்தில் திட்டினார். 

அவமானத்தை மறக்காத ஷமி... அணிக்குள் புகைச்சல்... ஹர்த்திக்குக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி... 

2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது,  மூத்த வீரரான முகமது ஷமியை களத்தில் திட்டினார். 

இதற்கு முன் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் யாரும் ஷமியை  திட்டியதில்லை. ஆனால், தன்னை விட அனுபவம் குறைந்த ஹர்திக் பாண்டியா தன்னை திட்டியதால் முகமது ஷமி எரிச்சல் அடைந்தார்.

அத்துடன், அந்தப் போட்டியின் முடிவில் இது போல இனியும் நடக்கக் கூடாது என குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகத்திடம் கூறினார். 

அப்போது குஜராத் அணி நிர்வாகம் இது குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேசிய பின்னர் அதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை.

இருந்தாலும், முகமது ஷமி அந்த சம்பவத்தை இரண்டு ஆண்டுகள் கழித்தும் இன்னும் மறக்கவில்லை. ஹர்திக் தன்னை திட்டியது குறித்து சில மாதங்களுக்கு முன்பு பொதுவெளியில் பேசி இருந்தார். 

குஜராத் டைட்டன்ஸ் அணியை விட்டு விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா சேர்ந்த போது, பாண்டியா செல்வதால் தங்கள் அணிக்கு எந்த இழப்பும் இல்லை எனக் கூறி இருந்தார்.

தற்போது ஐபிஎல் தொடர்பான ஊடக விவாதங்களில் பங்கேற்று வரும் முகமது ஷமி, மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து பேசுகையில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியா ஐந்தாம் வரிசையில் இறங்காமல் ஏழாம் வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார்.

அது குறித்து விமர்சித்த ஷமி, நான்கு அல்லது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்குவதில் என்ன பிரச்சனை? ஏழாம் வரிசையில் இறங்கினால் பின்வரிசை வீரராகவே கருத முடியும். முன்பே களமிறங்கி இருந்தால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றிருக்காது என விளாசினார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை ஒதுக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆனதால் அந்த அணிக்குள் வீரர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளது.

அத்துடன், சொந்த மாநிலமான குஜராத்தின் ஐபிஎல் அணியை விட்டு சென்றதில் அந்த மாநில ரசிகர்கள் ஹர்திக் பாண்டியா மீது கோபமாக இருக்கிறார்கள். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...