சிஎஸ்கே அணியின் வெற்றியை குழி தோண்டிப் புதைத்த மொயீன் அலி.. சோகத்தில் ரசிகர்கள்.. நடந்தது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி பந்து வீசிய போது இரண்டாவது பந்திலேயே விக்கெட் பெறும் வாய்ப்பு இருந்த நிலையில் அந்த வாய்ப்பை மொயீன் அலி தவறவிட்டு சொதப்பினார்.
ஆனால், அதன் பின்னர் பந்துவீச்சின் போது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைக்கவே இல்லை. மொயீன் அலி தவறவிட்ட கேட்ச் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக அமைந்தது.
சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், சிவம் துபேவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க திணறியதுடன், துபேவை தவிர எந்த பேட்ஸ்மேனும் 150 ஸ்ட்ரைக் ரேட்டை தொடவில்லை.
ஹைதராபாத் அணியில் நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை சிஎஸ்கே அணி சேர்த்த போதே இது மிகக் குறைவான ஸ்கோராக கருதப்பட்டது. எனவே, விரைவாக விக்கெட் வீழ்த்துவதே சிஎஸ்கே அணி வெற்றிப்பெறுவதற்கான ஒரே வழியாக காணப்பட்டது.
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை ட்ராவிஸ் ஹெட்சந்தித்தார். அந்த பந்தை அவர் அடிக்க முயன்ற போது பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்று இருந்த மொயீன் அலி கைகளுக்கே வந்தது. ஆனால், மொயீன் அலி தடுமாறி அந்த கேட்ச்சை தவற விட்டார்.
ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச்சை மொயீன் அலி தவற விட்டதால் சிஎஸ்கே ரசிகர்கள் வாயடைத்து போய் நின்று இருந்தனர். அதன் பின் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா அதிரடியின் உச்சத்துக்கு சென்றதுடன், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து, சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |