திடீரென சரிந்த 2 விக்கெட்டுகள்.. மிரண்ட பவுலர்கள்... விராட் கோலி செய்த மேஜிக்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
சிறப்பாக ஆடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 101 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார். இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் கூட்டணி களமிறங்கியது.
இதில் இந்திய அணியின் சிராஜ் வேகத்தில் மார்க்ரம் 5 ரன்கள் எடுத்து கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் இளம் வீரர் டோனி டி சோர்சியுடன் எல்கர் இணைந்து தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார்.
இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் விரக்தியடைந்தனர். இதனால் 15 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா மற்றும் அஸ்வின் உள்ளிட்ட 5 பவுலர்களையும் கேப்டன் ரோகித் சர்மா பயன்படுத்தினார்.
இருப்பினும் அவர்கள் இருவரும் விக்கெட்டை கொடுக்க மாட்டோம் என்று உறுதியுடன் இருந்தனர். சிறப்பாக ஆடிய எல்கர் அரைசதம் கடந்து அசத்தினார். வேறு வழியின்றி மீண்டும் ரோகித் சர்மா பும்ரா - சிராஜ் கூட்டணியை வைத்து அட்டாக் செய்தார்.
அப்போது 29வது ஓவர் தொடங்குவதற்கு முன்பாக விராட் கோலி நடுவர் அருகில் இருந்த ஸ்டம்பின் பைல்ஸை மாற்றி வைத்து ஏதோ மேஜிக் செய்தார். இதுபோல் ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணியின் பிராட் மேஜிக் செய்து, இரு முறை பலன் கிடைத்தது.
அதேபோல் விராட் கோலி பைல்ஸை மாற்றி வைத்த 2 பந்துகளுக்கு பின் பும்ரா ஓவரிலேயே சோர்சி 28 ரன்களிலும், கீகன் பீட்டர்சன் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |