இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெறுகின்றது: விசாரணை வேண்டும்; பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏமாற்றி வெற்றி பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் குற்றம் சாட்டி உள்ளமை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் முதல் சுற்றிலே வெளியேறியதால் அதிர்ச்சி அடைத்தனர்.
இதனால் பாகிஸ்தானில் கடும் சர்ச்சை ஏற்பட்டு உள்ள சூழலில் இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதி வரை முன்னேறி இருப்பதை பாகிஸ்தான் அணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதனால் அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக் ஆகியோர் இந்திய அணி ஏமாற்றி தான் வெற்றி பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தாகவும், 88 ரன்கள் எடுக்கும் போது ஐந்து விக்கெட் இழந்த நிலையில், அதன் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாபலும் இதற்கு காரணம் இந்திய அணி பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்ததுதான் காரணம் என, இன்சாமம் உல் ஹக் கூறியுள்ளார்.
அத்துடன், இந்திய வீரர் ஆர்ஸ்தீப் பந்தை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பணியை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும் என்றும் இந்திய வீரர்கள் பந்தை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று அவர் கூறி இருக்கின்றார்.
ஆனால், இந்த தொடரில் ஆர்ஸ்தீப் சிங் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளதுடன், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் ஒன்பது ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் அற்றது என்பதுடன், முன்பு போல் பந்தை சேதப்படுத்தினால் அதனை ஈசியாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் தற்போது இருக்கின்றது.
அத்துடன், மைதானத்தை சுற்றி 360 டிகிரி கேமரா கோணங்கள் இருக்கும் நிலையில் பந்தை சேதப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
இதனால் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வயிற்று எரிச்சலில் பேசுவதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |