அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: மனைவியின் மரணத்துக்கு காரணம் தானே என கணவர் ஒப்புதல்

2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ச

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை: மனைவியின் மரணத்துக்கு காரணம் தானே என கணவர் ஒப்புதல்

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது கணவர் தற்போது தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, அவுஸ்திரேலியாவின் Adelaide நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்த சுப்ரியா (36) என்பவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதும், அவை பலனளிக்காமல் சுப்ரியா உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாக, அவரது கணவரான விக்ராந்த் தாக்கூர் (42) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் ஜாமீன் கோரி எந்தவிதமான விண்ணப்பத்தையும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது, தனது மனைவியின் மரணத்துக்கு தானே காரணம் என தாக்கூர் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், அவர் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக கருதப்படும் சம்பந்தப்பட்ட நபர்களின் DNA ஆய்வு முடிவுகள் மற்றும் சுப்ரியாவின் உடற்கூறு ஆய்வு (post-mortem) அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இதனால், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கை 16 வாரங்கள் தள்ளிவைக்க அரசு தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்தில் மீண்டும் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிடையில், சுப்ரியாவின் சிறுவயது மகன் தாயை இழந்து அநாதரவான நிலையில் விடப்பட்டிருப்பது, இந்த சம்பவத்தை மேலும் வேதனையாக்கியுள்ளது. இந்த வழக்கு அவுஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.