இந்தியா - தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11.... இந்தியா எடுத்த ரிஸ்க்.. விவரம் இதோ!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.
வலுவான தென்னாப்பிரிக்கா அணியை சமாளிக்க கூடுதலாக ஆறாவது பந்துவீச்சாளர் இருந்தால் நல்லது என்றாலும் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்க உள்ளது.
அதே சமயம், நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற கூட்டணி என்பதால் அணியை மாற்றவும் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விரும்ப மாட்டார்கள் என கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட் போட்டிக்கு முன் அளித்த பேட்டியிலும் கூட ஆறாவது பந்துவீச்சாளராக விராட் கோலியை பயன்படுத்துவோம் என வேடிக்கையாக கூறினார்.
ஆனால், அதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஆறாவது பந்துவீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்குர் அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை.
இந்திய வீரர்களுக்கு சிக்கல்.. கண்டிப்பா 300 ரன் தாண்டலாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்
பேட்டிங்கை பொறுத்தவரை சுப்மன் கில், ரோஹித் சர்மா துவக்க வீர்ரகள். அடுத்த வரிசையில் வழக்கம் போல விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்கள்.
ரவீந்திர ஜடேஜா ஏழாவது வரிசையில் பேட்டிங் செய்ய வருவார். பேட்டிங்கில் ஜடேஜா தான் கடைசி. எனவே இந்தியா 5 விக்கெட்களை இழந்து விட்டால் சிக்கல் ஆரம்பித்து விடும்.
பந்துவீச்சில் இரண்டு ஸ்பின்னர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்ற திட்டத்தையே இந்தியா செயல்படுத்தும். அதன்படி ஸ்பின் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அணியில் இடம் பெறுவார்கள்.
இந்திய அணி பிளேயிங் 11
ரோஹித் சர்மா (கேப்டன்),சுப்மன் கில், விரட்ட கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
விராட் கோலி தான் 6வது பவுலர்.. அவர் சதம் குறித்து எல்லாம் கவலைப்படுவதில்லை - டிராவிட் கருத்து விராட் கோலி தான் 6வது பவுலர்.. அவர் சதம் குறித்து எல்லாம் கவலைப்படுவதில்லை - டிராவிட் கருத்து
மறுபுறம் தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை அந்த அணி எப்போதுமே நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் என்ற அணியையே தேர்வு செய்ய விரும்பினாலும், கொல்கத்தா பிட்ச் ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பதாக கருதினால் அந்த அணியும் இந்தியா போல, இரண்டு ஸ்பின்னர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11 (உத்தேச அணி)
டெம்பா பவுமா (கேப்டன்), க்விண்டன் டி காக், ரஸ்ஸி டஸ்ஸன், எய்டன் மார்கிரம், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா, கேஷவ் மகாராஜ், லுங்கி நிகிடி, தப்ரைஸ் ஷம்சி.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |