விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய 5வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இந்திய அணி துடுப்பாட்டம்
முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்துவிடும். இங்கிலாந்து அணி இந்த போட்டியில் டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும்.
ஆனால் இந்த போட்டிக்கு அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் நிச்சயம் ஏதோ ஒரு அணி வெற்றி அல்லது தோல்வியை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. மழை பெரும் அளவு குறிக்கிடாத வரை டிரா அடைய வாய்ப்பில்லை.
முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் அடுத்து களமிறங்கியஇங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்கனை சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய டக்கட் 43 ரன்களிலும், அதிரடி காட்டிய ஜாக் கிராலி 64 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஜோடி ஆட்டமிழ்ந்த பிறகு இங்கிலாந்து வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறினார். இதற்கு காரணம் சிராஜ் மற்றும் பிரசித் ஆகியோர் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் ஆலி போப் 22 ரன்களும் ஜோ ரூட் 29 ரன்களும், ஹாரி புரூக் 53 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஜோக்கப் போத்தேல் 6 ரன்களிலும், ஜெமி ஸ்மித் , ஜெமி ஓவர்டன் ஆகியோர் டக்அவுட் ஆகியும் அட்கின்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கிறிஸ் வொக்ஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இது இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 23 ரன்கள் கூடுதலாகும். இந்திய பந்துவீச்சு தரப்பில் முகமது சிராஜ் பிரசித் கிருஷ்ணா, தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, ஜெய்ஸ்வால் மட்டும் அதிரடியாக விளையாடி ஏழு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் வெறும் 29 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 ரன்கள் சேர்த்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் உடன் களத்தில் உள்ளது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 52 ரன்கள் கூடுதலாகும். ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்.