டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பண்ட் படைத்த மெகா சாதனை.. அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பண்ட் படைத்த மெகா சாதனை.. அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்த சில நிமிடங்களிலேயே காலில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

இதன்பின் சாய் சுதர்சன் - ரிஷப் பண்ட் கூட்டணி இணைந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக ரன்களை குவிக்க, சாய் சுதர்சன் நிதானமாக ரன்களை சேர்த்தார். அதிலும் பிரைடன் கார்ஸ் வீசிய ஒரு பந்தில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸ் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிலையில், இந்த போட்டியில் 19 ரன்களை கடந்த போது, ரிஷப் பண்ட் புதிய வரலாறு ஒன்றை படைத்தார்.  அதாவது, இங்கிலாந்து மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய வரலாறு ரிஷப் பண்ட் வசமாகி இருக்கிறது.

இங்கிலாந்து மண்ணில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக தோனி 778 ரன்களை சேர்த்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. 

சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 37 ரன்களை எடுத்திருந்தார். அப்போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், அதனை காலில் வாங்கினார். இதனால் ரிஷப் பண்ட் உடனடியாக பிசியோவை களத்திற்கு வரவழைத்தார். 

அப்போது ரிஷப் பண்ட் ஷூவை கழற்றி பார்த்த போது, அவரின் காலில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் சுண்டு விரலில் அருகில் மிகப்பெரிய வீக்கம் இருந்தது. இதனால் மினி ஆம்புலன்ஸில் அமர வைக்கப்பட்டு ரிஷப் பண்ட் ஓய்வறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரில் அபாரமான ஃபார்மில் இருந்து வரும் ரிஷப் பண்ட் இதுவரை 448 ரன்களை சேர்த்திருக்கிறார். கடந்த போட்டியின் போதே கை விரலில் காயம் ஏற்பட்ட நிலையில், இந்தப் போட்டியில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.