நியூசிலாந்தின் தொடர் தோல்வி.. பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு... புள்ளிப்பட்டியலில் மாற்றம்.. சரிந்தது இந்தியா!

புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்தின் தொடர் தோல்வி.. பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு... புள்ளிப்பட்டியலில் மாற்றம்.. சரிந்தது இந்தியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய டி காக் 116 பந்துகளில் 114 ரன்களும், வான் டர் டஸன் 118 பந்துகளில் 133 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 35.3 ஓவரகளில் 167 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்த வெற்றியின் மூலமாக மூலமாக தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்குள் ஒரு கால் பதித்துவிட்டது. 

அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக 12 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்த நிலையில், 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் நியூசிலாந்து அணி அடைந்த தோல்வி, அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் 4வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணியின் தொடர் தோல்வி, அடுத்தடுத்த இடங்களில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பை திறந்து வைத்துள்ளது. 

இதனால் நியூசிலாந்து அணி அடுத்ததாக விளையாடவுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நவ.4ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவில் பல்வேறு பதில் கிடைக்கும். 

இந்த இரு அணிகளுக்கும் பெரியளவில் ரன் ரேட்டிலும் வித்தியாசம் இல்லாததால், எதிர்வரும் போட்டிகளை வென்றாலே அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...