ஐசிசி உலக கோப்பை 2023 - இந்திய அணி பஸ் ஓட்டுனராக விஜய் டிவி புகழ் வந்தாரா.. அஸ்வின் வெளியிட்ட அதிசயம்!
ஐசிசி உலக கோப்பை 2023: இதை பார்த்த உடனே ரசிகர்களும் அட ஆமாம். நம்ம விஜய் டிவி புகழ் மாதிரி இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
ஐசிசி உலக கோப்பை 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நேற்று கவுகாத்திக்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய வீரர்களை அழைத்து செல்வதற்காக பேருந்து ஒன்று கவுகாத்தி ஹோட்டலுக்கு வந்திருக்கிறது. அப்போது அந்த பஸ்ஸின் டிரைவரை பார்த்து அஸ்வின் அதிர்ச்சி அடைந்தார்.
ஏனென்றால் அந்த டிரைவர் பார்ப்பதற்கு விஜய் டிவியின் நடிகர் புகழ் மாதிரி இருந்தார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அஸ்வின் அந்த டிரைவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விஜய் டிவியின் புகழ் எங்களை அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு கொண்டு செல்லும் பணியில் பெரிய மனதுடன் செய்கிறார் என்று விஜய் டிவி புகழை டேக் செய்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
இதை பார்த்த உடனே ரசிகர்களும் அட ஆமாம். நம்ம விஜய் டிவி புகழ் மாதிரி இருக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர். இன்னும் சிலர் இது உண்மையாகவே விஜய் டிவி புகழ் தான் என்று நம்பி விட்டனர்.
விஜய் டிவி புகழ் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கி காமெடியனாக வலம் வரும் நிலையில் அவர் ஏன் பேருந்து ஓட்டுனராக செல்லப் போகிறார் என்பதை சில ரசிகர்கள் நினைக்க மறந்து விட்டனர்.
காரணம் அது அப்படியே விஜய் டிவி புகழ் மாதிரி இருந்ததால் நடிகர் அஸ்வின் இவ்வாறு ஸ்டோரி போட்டு இருந்தார். உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்த பிறகு அஸ்வின் தற்போது உற்சாகத்தில் இருப்பதையே இந்த செயல் காட்டுகிறது.
இதே உற்சாகத்துடன் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் கெத்து காட்டினால் அது ரசிகர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை தரும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |