இந்திய அணி தோல்வியிலிருந்து தப்பிக்க என்ன செய்யனும்? கம்பீர் - கில் மாஸ்டர் பிளான்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்று இருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது இங்கிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்களில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய மைனஸ் ஆக தற்போது மாறியிருக்கிறது.
இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் 135 ஓவர் முடிவில் 544 ரன்கள் எடுத்திருக்கிறது. கைவசம் இன்னும் மூன்று விக்கெட்டுகள் உள்ளது.
இது இந்திய அணியின் ஸ்கோரை விட 186 ரன்கள் அதிகமாகும். தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியை பெற வைக்க இங்கிலாந்து முயற்சி செய்யும்.
கைவசம் இருக்கும் மூன்று விக்கெட்டுகளை பயன்படுத்தி இங்கிலாந்து அணி இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட கூடுதலாக 300 ரன்கள் எடுக்க முயற்சி செய்யும்.
இதனால் நான்காவது நாள் ஆட்டநேர தொடக்கத்தில் இந்திய அணி எஞ்சிருக்கும் மூன்று விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு மிகப்பெரிய பேட்டிங் திறனை வெளிப்படுத்த வேண்டும்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால், ராகுல், சாய் சுதர்சன் ஆகிய நான்கு வீரர்களுமே மிகப்பெரிய சதத்தை அடிக்க வேண்டும். இதேபோன்று ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர் முடிந்தவரை பேட்டிங் செய்ய வேண்டும்.
இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 400 முதல் 500 ரன்கள் வரை அடிக்க வேண்டும். இதே போல் ஐந்தாவது நாள் மதிய நேர உணவு இடைவேளை வரை இந்திய அணி பேட்டிங் செய்ய வேண்டும்.
ஐந்தாவது நாள் தேனீர் இடைவெளி வரை பேட்டிங் செய்தால் இன்னும் சந்தோஷம்தான். இதன் மூலம் இங்கிலாந்து அடிக்கும் ஸ்கோரை விட இந்தியா ஒரு 200 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டு பின் கிடைக்கும் நேரத்தை வைத்து இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க இந்தியா முயற்சி செய்ய வேண்டும்.
அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் இந்த போட்டியில் இந்தியா டிரா செய்யலாம். இந்த போட்டியில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும் இன்னும் இந்தியாவின் கையில் இரண்டாவது இன்னிங்ஸ் என்ற ஒரு வாய்ப்பு இருக்கிறது.
அதில் இந்திய வீரர்கள் தங்கள் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸை ஆடி ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று விடும்.