விளையாட முடியாது.. டி20 இந்திய அணியின் நட்சத்திர வீரர் முடிவு.. கோபத்தில் அகார்கர்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், இமெரிக்காவின் நியூயார்க் சென்றடைந்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், இமெரிக்காவின் நியூயார்க் சென்றடைந்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்ற டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அணிக் குழு நியூயார்க் சென்றடைந்த நிலையில், அந்த குழுவில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை.
இதுதான் கடைசி டி20 உலகக்கோப்பை... 11 ஆண்டுகள் கனவை நிறைவேற்றுவாரா ரோகித்?
பிளே ஆப்பில் விளையாடிய கோலி, சாம்சன் ஆகியோருக்கு விசா பிரச்சினை என்பதால், இந்தியாவிலேயே இருக்கிறார்கள். ஆனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாத மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, விசா கிடைத்தும் நியூ யார்க் செல்லவில்லை.
அவர் வெளிநாட்டில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார். பிசிசிஐயிடமும் இதனை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அத்துடன், ''ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். இதற்காக, நீங்கள் மே 29ஆம் தேதியே இந்திய அணியில் இணைய வேண்டும்'' எனக் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த ஹர்திக், ''என்னால் முடியாது. ஜூன் 2ஆம் தேதியில்தான் இந்திய அணியில் இணைவேன். எனக்கு இப்போது மன அமைதி தேவை'' என அதிரடியாக பதில் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, இணைய வழியில் நடைபெற்ற அணி மீட்டிங்கில் பேசிய அஜித் அகார்கர், ''கோலி, சாம்சன் இருவரும் பார்மில் இருப்பதால், அவர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை என்றால் பரவாயில்லை.
ஹர்திக் பார்ம் அவுட்டில் இருக்கிறார். அவர் விளையாட முடியாது என்கிறார். வீரர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு திமிர் வருகிறது எனத் தெரியவில்லை'' என அதிருப்தியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஹர்திக் கலந்துகொள்ளாத பட்சத்தில், ஷிவம் துபே அதிரடி காட்டும் பட்சத்தில், ஷிவம் துபேவைதான் ரெகுலராக விளையாட வைப்பார்கள் எனக் கருதப்படுகிறது.
விராட் கோலி, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஜூன் 30ஆம் தேதி, விசா பிரச்சினை முடிந்துவிடும் என்பதால், அன்றைய தினமே அவர்கள் நியூ யார்க்கிற்கு புறப்படுவார்கள் என்றும், அவர்கள் வங்கதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |