லியோ படத்தில் அதிக சம்பளம் யார் வாங்கியிருக்காங்க தெரியுமா? முழு விவரம் இதோ!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தட் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
 
                                இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தட் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
தற்போது, நல்ல விமர்சனம் பெற்று வருகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 250 முதல் 300 கோடி ரூபாயாம். அந்த வகையில், லியோ படக்குழுவினர்கள் பெற்றிருக்கும் சம்பள விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தளபதி விஜய்
தளபதி விஜயின் 67வது படம் லியோ. இந்த படத்தில் லியோ தாஸ் மற்றும் பார்த்திபன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருகிறார் விஜய் . மாபெரும் வரவேற்புக்கு பிறகு தளபதி விஜயின் லியோ படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விஜயின் நடிப்புக்கு எக்கச்சக்க பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. லியோ படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம் விஜய்.
த்ரிஷா
கிட்டதட்ட 15 வருடங்களுக்கு பிறகு தளபதி விஜயுடன் இணைந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. இந்த படத்தில் விஜயின் மனைவியான சத்யா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் விஜயின் பழைய கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். சத்யா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை த்ரிஷா 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.
சஞ்சய் தட்
லியோ படத்தின் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார் சஞ்சய் தட். இவரின் கதாபாத்திரத்தின் பெயர் ஆண்டனி தாஸ் ஆகும். இந்த ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்துக்கும் விஜய் நடித்திருக்கும் லியோ தாஸ் கதாபாத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லியோ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். லியோ படத்தில் நடிப்பதற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம் சஞ்சய் தட்.
 
அர்ஜுன்
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் லியோ படத்தில் பயங்கரமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹரால்டு தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன். லியோ படத்தின் முக்கிய வில்லனாக இந்த கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. லியோ படத்திற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் அர்ஜுன்.
கவுதம் வாசுதேவ் மேனன்
இயக்குனராக அறிமுகமான கவுதம் வாசுதேவ் மேனன் சில படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேனன். லியோ படத்தில் ஜோஷி ஆன்ட்ரியூஸ் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேனன். இதற்காக 70 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.
ப்ரியா ஆனந்த்
தமிழில் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு சில படங்களில் நடித்தவர் நடிகை ப்ரியா ஆனந்த். அதன்பிறகு, படங்களில் அவரை பார்க்கமுடியவில்லை. கம்பேக் கொடுக்கும் விதமாக லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். ஜோஷி ஆன்ட்ரியூஸின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த். இந்த படத்திற்காக 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார் ப்ரியா.
லோகி மற்றும் அனிருத்
படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் இருவரின் சம்பவம் இப்போது உலகையே அசத்திவருகிறது. வேற லெவல் கதை மற்றும் திரைக்கதை அதற்கேற்றாற்போன்ற தரமான இசை, BGM என படத்தை வேறொரு லெவலுக்கு கொண்டுபோன இவர்களுக்கு படத்தின் வெற்றியில் பெரும்பங்கு இருக்கிறது.
அந்த வகையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் லியோ படத்திற்காக 25 கோடி ரூபாயும், இசையமைப்பாளர் அனிருத் 8 கோடி ரூபாயும் சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். முதல் நாளிலேயே எக்கச்சக்க வசூலை குவித்து வரும் லியோ தமிழ் சினிமாவை வேறொரு லெவலுக்கு அழைத்துசெல்லப்போவது உறுதி என்கிறார்கள் ரசிகர்கள்..
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






