சொந்த மகள்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சொந்த மகள்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை  – அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மஞ்சுநாத் என்பவர், தனது சொந்த மகள்கள் இருவரையும் பாலியலாக பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மஞ்சுநாத், அப்பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். இவருக்கு 13 மற்றும் 10 வயதுடைய இரு மகள்களும், மனைவி, தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில், பள்ளிக்குச் சென்ற இரு சிறுமிகளும் ஆசிரியர்களை சந்தித்து, தங்களது தந்தை தங்களை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இது குறித்து வெளியே பேசிவிடுவோம் என்பதால் பள்ளிக்கு விடாமல் வீட்டிலேயே சிறை வைத்திருந்ததாகவும் கதறி அழுதனர்.

இந்த கொடூர தகவல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் மூலம் மஞ்சுநாத்தின் தாயிடம் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், கூச்சலிட்டதால் அவர் தப்பி ஓடிவிட்டார் எனவும் தெரிவித்தார்.

கிராம மக்கள், “எங்கள் ஊருக்கே இந்த சம்பவம் களங்கம்” என்று பொது அதிர்ச்சியுடன் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சித்ரதுர்கா பொலிசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மஞ்சுநாத்தை கைது செய்தனர்.