முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
 
                                முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (23) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்திருந்த நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவிடுமாறு கோரி பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நேற்று (22) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, பெர்னாண்டோ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
அத்துடன், மனு மீதான பரிசீலனை அக்டோபர் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
பெர்னாண்டோ கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, 153 ‘லங்கா சதொச’ ஊழியர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (ஒக்டோபர் 23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகர்த்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள நட்சத்திர தர ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு சொந்தமானது என கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பாக வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவரது கட்சிக்காரர் CID யில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






