வருவேனானே தெரியாது.. தோனியின் கடைசி சீசன் இதுதான்? அவரே கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

May 1, 2025 - 06:10
வருவேனானே தெரியாது.. தோனியின் கடைசி சீசன் இதுதான்? அவரே கொடுத்த அப்டேட்!

சிஎஸ்கே அணிக்காக அடுத்த சீசனில் விளையாடுவது தொடர்பில் கேப்டன் தோனி முதல்முறையாக குழப்பமான பதில் ஒன்றை அளித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி வந்த போது, ரசிகர்களின் கோஷம் வானை பிளக்க வர்ணனையாளர் மாரிசன் திடீரென தோனியிடம், சிஎஸ்கே அணிக்காக நீங்கள் அடுத்த சீசனிலும் விளையாட முடிவு செய்துவிட்டதை போல் ரசிகர்களின் இந்த வரவேற்பை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார்.

அதற்கு சிரித்து கொண்டே, தற்போதைய சூழலில் நான் அடுத்தப் போட்டியில் விளையாடுவேனா என்பதே தெரியவில்லை என்று தோனி கிண்டலாக பதில் அளித்தார். 

தோனியின் இந்த பதில் ரசிகர்களிடையே விவாதமாகி உள்ளது. 2020ஆம் ஆண்டின் போது தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்ற கேள்வியை டேனி மாரிசன் எழுப்பினார்.

அதற்கு தோனி, இல்லை என்று பதில் அளித்தது இன்றுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இதுபோல் ஒவ்வொரு சீசனின் போதும் தோனியிடம் இதுதான் உங்களின் கடைசி சீசனா என்ற கேட்கப்பட்ட போது, அடுத்த சீசனில் விளையாடுவேன் என்று பதில் அளிப்பார். 

அதேபோல் ஓய்வு முடிவை எடுப்பதற்கு இன்னும் சில மாதங்கள் நேரம் இருக்கிறது என்று கூறுவார். ஆனால் இம்முறை ஜாலியாக, அடுத்த சீசன் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. 

இதனால் தோனியின் கடைசி சீசனாக இது இருக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் தோனி 44 வயதை எட்டிவிடுவார். 

ஏற்கனவே சில ஃபிட்னஸ் பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அணியை மொத்தமாக ருதுராஜ் கெய்க்வாட்-டிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!