சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்! 8 வீரர்கள் வெளியேற்றம்; தோனி ஓய்வுக்கு முன் அதிரடி திட்டம்!
கடந்த ஐபிஎல் 18ஆவது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு கசப்பான கனவாக அமைந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்தைப் பிடித்து சிஎஸ்கே சொதப்பியது.
கடந்த ஐபிஎல் 18ஆவது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு கசப்பான கனவாக அமைந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்தைப் பிடித்து சிஎஸ்கே சொதப்பியது.
இந்த மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் அணியைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மேலும், அடுத்த சீசனுடன் மகேந்திரசிங் தோனியும் ஓய்வுபெற அதிக வாய்ப்பு இருப்பதால், தரமான வீரர்களை வாங்கி அணியை வலுப்படுத்தாமல் விட்டால், சிஎஸ்கே 'ஸ்டார் அணி' என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
ஏலத்திற்கு அதிக தொகையுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருப்பதால், அதிகபட்சமாக மொத்தம் 8 வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 29.2 கோடி ரூபாயுடன் ஏலத்திற்குச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, ஏலத்தில் சிஎஸ்கே சொதப்பினால், அது அணிக்கு ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே ஓய்வு அறிவித்துவிட்டதால், 9.75 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது. சிஎஸ்கே வெளியேற்ற வாய்ப்புள்ள மற்ற 7 வீரர்கள் மற்றும் அவர்கள் மூலம் கிடைக்கும் தொகையின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
|
வீரர் பெயர்
|
மிச்சமாகும் தொகை (கோடியில்)
|
|
டிவோன் கான்வே
|
6.25
|
|
ராகுல் திரிபாதி
|
3.40
|
|
சாம் கரண்
|
2.40
|
|
குர்ஜப்னீத் சிங்
|
2.20
|
|
நேதன் எல்லிஸ்
|
2.00
|
|
தீபக் ஹூடா
|
1.70
|
|
ஜிம்மி ஓவர்டன்
|
1.50
|
கடந்த 18ஆவது சீசனில், டிவோன் கான்வே 6 போட்டிகளில் வெறும் 156 ரன்களை மட்டுமே அடித்தார் (இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும்). டாப் ஆர்டரில் இவர் சரியாகப் பொருந்தாததால் (Fit ஆகவில்லை), இவருக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை, இதனால்தான் இவர் நீக்கப்பட உள்ளதாகக் கருதப்படுகிறது.
அதேபோல், தீபக் ஹூடா 7 போட்டிகளில் 31 ரன்களை மட்டுமே அடித்தார். சாம் கரண் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து, 114 ரன்கள் அடித்திருந்தார். இவர் வேகப்பந்து வீச்சாளராகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதும் வெளியேற்றத்திற்கான காரணமாகும்.
கடந்த 18ஆவது சீசனில் இடைப்பகுதியில் அணியில் இணைந்த ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரைத் தக்கவைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளதாம்.
மேலும், ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை டிரேடிங் செய்யலாம் என்பதால், சிஎஸ்கே டிரேடிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக, குஜராத் டைடன்ஸ் (GT) அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தரைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சுந்தர், GT அணியின் காம்பினேஷன் காரணமாக ரெகுலராக ப்ளேயிங் 11-ல் வாய்ப்பு பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு டிரேடிங் வாய்ப்பாக, சிஎஸ்கே அணி நேதன் எல்லிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்குக் கொடுத்துவிட்டு, மாற்றாக ரொமாரியோ செய்பர்ட்டை வாங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த டிரேடிங் நடந்தால், செய்பர்ட்டுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புது பினிஷராக இருப்பார் எனவும் தகவல் தெரிவிக்கிறது.
