துருக்கி பாராளுமன்றத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு! 

மேலும் 2 காவல் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி பாராளுமன்றத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு! 

துருக்கி பாராளுமன்ற கட்டிடத்திற்கு வடக்கே உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள்  உயிரிழந்துள்ளனர். 

மேலும் 2 காவல் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 9:30 மணி அளவில் 2 பயங்கரவாதிகள்  நாடாளுமன்றத்தின் அருகே இருக்கும் கட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனை கவனித்த காவல் அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 

பிறகு தடையை மீறி அந்த பயங்கரவாதிகள் உள்ளே நுழைந்தனர். நுழைந்த பிறகு ஒரு பயங்கரவாதி தான் கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்.

இதில் அந்த பயங்கரவாதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குண்டு வெடித்த காரணத்தால் அந்த பகுதியில் இருந்த இரண்டு காவல் அதிகாரிகளும் லேசான காயம் அடைந்தனர். 

பிறகு மற்றோரு பயங்கரவாதியை அங்கிருந்த பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றார்கள். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

திடீரென  குண்டு வெடித்து சம்பவம் நடைபெற்றதால்  துருக்கி  பாராளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும், உள்துறை அமைச்சக கட்டிடத்தை சுற்றிலும் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் மற்றும் அம்புலன்ஸ் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...