இந்திய டி20 அணி: ஆஸ்திரேலியத் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் கம்பீருக்குத் தலைவலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய டி20 அணி: ஆஸ்திரேலியத் தொடருக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் கம்பீருக்குத் தலைவலி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற கில், நிதீஷ்குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஆர்ஸ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோரைத் தவிர, மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்துள்ளனர்.

யாரை தேர்வு செய்வது, யாரை விடுவது என்ற குழப்பத்தில் பயிற்சியாளர் கம்பீர் இருக்கின்றார். இந்தியாவின் பலமே அதன் சுழற் பந்துவீச்சு தான். அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 12 ஓவர்களை வீசி எதிரணியை கட்டுப்படுத்துவது வழக்கம்.

ஆனால், ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் தேவையில்லாத ஒரு விஷயமாகும். இதனால் அணியை வேகப்பந்துவீச்சாளர்கள் நம்பி தான் கட்டமைக்க வேண்டும்.

வருண் சக்கரவர்த்தி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக விளங்குகிறார். அக்சர் பட்டேல் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்திருக்கிறார். இதனால் அவர் ஒரு ஆல்ரவுண்டராக அணியில் இடம் பெற வேண்டும் என்று கருதப்படுகிறது.

இப்படி இருக்கும்போது குல்தீப் யாதவ்க்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் குல்தீப் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவரை அணியில் சேர்க்காமல் எப்படி விட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை மூன்று சுழற் பந்துவீச்சாளர்களைச் சேர்த்தால், அது ஆடுகளத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கம்பீர் நினைக்கிறார். மேலும், மூன்று சுழற்பந்துவீச்சாளர்களைச் சேர்க்கும்போது, அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற நிலை ஏற்படும்.

இதனால் என்ன செய்யலாம் என்ற யோசனையில் கம்பீர் இருக்கின்றார். ஒருவேளை மூன்று சுழற்பந்துவீச்சாளர்களைச் சேர்த்தால், பவர் பிளேவில் வருண் சக்கரவர்த்தியைப் பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்களை கட்டுப்படுத்த முடியுமா என்ற யோசனையிலும் கம்பீர் இருக்கிறார்.