மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின்.. எந்த தொடரில் தெரியுமா..?
‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது.
‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டில் மீண்டும் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை இத்தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரில், இந்தியா, ஹாங்காங், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற முக்கிய அணிகள் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியின் சிறப்பம்சம் என்னெவென்றால் ஒரு அணியில் 6 வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும். விக்கெட் கீப்பரை தவிர மற்ற 5 வீரர்களும் கட்டாயம் பந்துவீசியாக வேண்டும்.
அதிலும் குறிப்பாக 6 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடத்தப்படுவது கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கி உள்ளது. ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் விளையாடுவதால் இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட உள்ளார். இதனை ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். இருப்பினும் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
