சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்... 15 வருட வரலாற்றை மாற்றுவாரா கோலி!

IPL 2024 News in Tamil: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

Mar 22, 2024 - 22:18

இந்த போட்டியில் களமிறங்க விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

17ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை ஒரேயொரு முறைதான் ஆர்சிபி அணி  சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது. 

2008ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் இந்த வெற்றி கிடைத்தது.

அத்துடன், கடந்த 2 சீசன்களுக்கு முன்பாக சிஎஸ்கே - ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய நிலையில், ஆர்சிபி அணி வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற்று ஆர்சிபியின் மோசமான வரலாற்றை மாற்ற விராட் கோலி களத்திற்கு திரும்பியுள்ளார்.

சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாத விராட் கோலி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.

3 ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் விராட் கோலி, ஆறு வார ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பி, முதல் போட்டியிலேயே சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!