ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் ஆபத்தான வைரஸ் தொற்று; வெளியான தகவல்!

ஐரோப்பிய நாடுகளில் mpox வைரஸின் புதிய மற்றும் ஆபத்தானதாக மதிப்பிடப்படும் clade 1b மாறுபாடு பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாறுபாடு ஆகஸ்ட் மாதத்திலிருந்து குறைந்தது 45 தொற்று வழக்குகளை உருவாக்கியுள்ளது. மருத்துவ நிபுணர்கள் கூறுவதின் படி, இந்த clade 1b வகை குழந்தைகளுக்கு அதிக ஆபத்தானதாக உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய திரிபுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து வருகிற சில பயணிகள் வழியாகவும் இந்த மாறுபாடு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதே சமயம், ஆப்பிரிக்காவில் தடுப்பூசி போடுதல் குறைந்திருப்பதும் பரவலை கட்டுப்படுத்த சவாலாக மாறியுள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் பரவலைத் தடுக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு 8 மில்லியன் mpox தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நன்கொடையாளர்களின் உதவியுடன் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.