இந்திய அணியில் மட்டுமல்ல... உள்ளூர் அணியில் கூட இடமில்லை.. தூக்கி எறியப்பட்ட இந்திய வீரர்!

இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும்  புஜாரா பங்கேற்று வந்தார். 

Aug 24, 2024 - 13:28
இந்திய அணியில் மட்டுமல்ல... உள்ளூர் அணியில் கூட இடமில்லை.. தூக்கி எறியப்பட்ட இந்திய வீரர்!

இந்திய டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர் புஜாராவுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. வங்கதேச டெஸ்ட் தொடரிலும், துலீப் ட்ராபி தொடரிலும் கூட புஜாராவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரிலும்  புஜாரா பங்கேற்று வந்தார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்தின் கவுன்டி அணியான சசக்ஸ்-இல் வெளிநாட்டு ஒப்பந்த வீரராக புஜாரா விளையாடினார். 2024 ஆம் ஆண்டில் இதுவரை புஜாரா கவுன்டி தொடரில் 501 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 62 ஆக உள்ளதுடன், இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.

சில போட்டிகளில் சசக்ஸ் அணியின் கேப்டனாகவும் கூட செயல்பட்ட புஜாரா சசக்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்தார்.  இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரரான டேனியல் ஹூக்ஸ்-ஐ தங்கள் அணியில் சேர்ப்பதற்காக புஜாராவை நீக்கி இருக்கிறது சசக்ஸ்.

இங்கிலாந்து கவுன்டி அணிகளின் விதிமுறைக்கு அமைய, நான்கு வெளிநாட்டு வீரர்களை தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பதுடன், ஒரு போட்டியில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விளையாடாம். விதிமுறைகள் உள்ளன. 

இந்த நிலையில், டேனியல் ஹூக்ஸ் டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளிலும் சசக்ஸ் அணிக்காக விளையாடுவார் என கூறப்படுகிறது. 

இந்த முடிவை எடுப்பதற்கு தாங்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும், புஜாரா தனது அனுபவத்தை சசக்ஸ் வீரர்களுக்கு கடத்தியதாகவும், பல இளம் பேட்ஸ்மேன்களுக்கு அவர் உதவியதாகவும் கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறது சசக்ஸ் அணி நிர்வாகம். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!