சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு.. பதவி நீக்கத்தால் அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு.. பதவி நீக்கத்தால் அதிரடி முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

38 வயதான ரோஹித் சர்மா இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 4301 ரன்கள் சேர்த்து உள்ளதுடன், அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்து உள்ளார்.

அத்துடன், இதுவரை 12 சதமும், 18 அரை சதமும் அடித்துள்ள ரோகித் சர்மா, இந்திய அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 2013 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

கடந்த சில போட்டிகளில் ரோகித் சர்மா பேட்டிங்கில் சொதப்பி வந்ததுடன்,  நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் பிரகாசிக்க தவறினார்.

இதன் காரணமாக சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 19ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளதுடன், இந்த தொடரில் ரோகித் சர்மாவை கேப்டன் பதவி விட்டு நீக்க தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து அஜித் அகார்கரும், பயிற்சியாளர் கம்பீரும் ரோகித் சர்மாவிடம் பேசியுள்ளதுடன், டெஸ்ட் அணியில் சாதாரண வீரராக விளையாடுமாற கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், கேப்டன் பதவி விட்டு நீக்கியதால் ரோஹித் சர்மா இனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று முடிவை அறிவித்து உள்ளார்.

ஏற்கெனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் விலகி இருக்கின்றார். அதனையடுத்து, ரோகித் சர்மா வெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோகித் சர்மாவின் இந்த அறிவிப்பு ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுடன், இந்திய டெஸ்ட் அணியில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.