சூறாவளி பாதிப்பு: இலங்கைக்கு அவசர உதவி வழங்க உறுதியளித்த பிரிட்டன்; வெளியான தகவல்
‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்படி, சுமார் $890,000 (சுமார் £675,000) மதிப்பிலான உதவித்தொகையை இலங்கைக்காக ஒதுக்க பிரித்தானிய அரசு உறுதியளித்துள்ளது.
இந்த உதவி,
-
செஞ்சிலுவைச் சங்கம்,
-
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை,
-
மற்றும் உள்ளூர் கூட்டாளிகளுடன் இணைந்து வழங்கப்படும்.
-
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் அவசரப் பொருட்கள், பாதுகாப்பான தங்குமிடம், உணவு, மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக வழங்குவது இந்த தொகையின் பிரதான நோக்கமாகும்.
சூறாவளியால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் இது ஒரு முக்கியமான சர்வதேச ஆதரவாக இருப்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
