சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனி சொன்ன முக்கிய தகவல்!
நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடர்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்ப்பதற்கு ஒரு நல்ல அணியாக இருந்த போதிலும் மைதானத்தில் அவ்வளவு சிறப்பாக யாருமே விளையாடவில்லை.
சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்டிங் படும் மோசமாக இருந்த நிலையில், அதனை சரி செய்வதற்குள் சீசன் முடிந்து விட்டது. அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ள சிஎஸ்கே அணி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆப்பிற்கு தகுதி பெறாமல் போனது.
இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடைசி சில போட்டிகளில் மாற்று வீரர்களாக வந்த சில வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. "அதைப் பற்றி முடிவு எடுக்க இன்னும் நாட்களில் உள்ளது. நான் வருவேன் என்றும் சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை" என்று போட்டி முடிந்த பின்பு தோனி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.
"ருதுராஜ் கெய்க்வாட் அடுத்த ஆண்டு வந்த பிறகு அணியைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டியது இல்லை" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் தான் சென்னை அணியின் கேப்டனாக இருப்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர்களான ஆயுஷ் மாத்ரே, உருவில் படேல், டெவால் பிரவீஸ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
இதேவேளை, இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மினி ஏலத்தில் சில வீரர்களை சென்னை அணி கழட்டி விட அதிக வாய்ப்புள்ளது. அதில் தீபக் ஹூடா, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திருப்பாதி போன்ற வீரர்கள் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.