தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவிக்கும் 'லியோ'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் பல திரையரங்குகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது 'லியோ' திரைப்படத்தின் ஒருவார வசூலில் 75 சதவீதம் தயாரிப்பு நிறுவனம் கேட்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதில் சுமூகமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |